பெங்களூரு: ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகிவரும் ‘காந்தாரா எ லெஜெண்ட்: சாப்டர் 1’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வரும் படம் ‘காந்தாரா எ லெஜெண்ட்: சாப்டர் 1’. இதன் அறிமுக டீசர் மட்டுமே இதுவரை வெளியாகி இருக்கிறது. யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த எந்தவொரு அறிவிப்புமே இதுவரை வெளியாகவில்லை. தற்போது ‘காந்தாரா எ லெஜெண்ட்: சாப்டர் 1’ படம் 2025-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதே தேதியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான படம் ‘காந்தாரா’. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த இப்படம் 16 கோடியில் உருவாக்கப்பட்டு உலகளவில் ரூ.400 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து அதன் முந்தைய கதையாக ‘காந்தாரா எ லெஜெண்ட்: சாப்டர் 1’ படத்தை உருவாக்கி வருகிறார் ரிஷப் ஷெட்டி. இதனையும் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago