‘புஷ்பா 2’ ட்ரெய்லர் எப்படி? - தெறிக்கும் ஆக்‌ஷன்!

By செய்திப்பிரிவு

பாட்னா: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்வில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

ஆக்‌ஷன், ரொமான்ஸ், த்ரில் என சுவாரஸ்யங்களுடன் வெளியாகி உள்ளது படத்தின் ட்ரெய்லர். கடந்த 2021-ல் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 2-ம் பாகம் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது. படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வரும் டிசம்பர் 5-ம் படம் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

புஷ்பாவின் கடத்தல் நெட்வொர்க், புஷ்பா - எஸ்.பி பன்வார் சிங் ஷெகாவத் (ஃபகத் பாசில்) இடையிலான மோதல், புஷ்பா - ஸ்ரீவள்ளியின் (ராஷ்மிகா) திருமண வாழ்க்கை உள்ளிட்ட காட்சிகள் 2.48 நிமிடம் ரன் டைம் கொண்ட ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது. ‘புஷ்பான்றது பேர் இல்ல. புஷ்பானா பிராண்டு’ போன்ற வசனங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. >>ட்ரெய்லர் வீடியோ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்