சென்னை: ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம்சாட்டி பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளதங்களில் நெட்டிசன்களின் ஆதரவையும், எதிர்ப்பையும் பார்க்க முடிகிறது.
நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்தப் பதிவுக்கு நடிகைகள் பார்வதி, நஸ்ரியா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கவுரி கிஷன், காயத்ரி உள்ளிட்ட பலரும் லைக் செய்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நெட்டிசன்கள், நயன்தாராவுக்கு ஆதரவாகவும், தனுஷுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நயன்தாரா ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் தரப்பில், “எதிர் நீச்சல் படத்தில் ‘லோக்கல் பாய்ஸ்’ பாடலில் சம்பளம் எதுவும் வாங்காமல் நடனமாடிக் கொடுத்தவர் நயன்தாரா. அந்த நன்றியை தனுஷ் மறந்துவிட்டார்” என தெரிவித்துள்ளனர். அதேபோல, “3 விநாடி வீடியோவுக்கு ரூ.10 லட்சம் கேட்பது அபத்தம்” என கருத்து தெரிவித்துள்ளனர். “நயன்தாராவின் திருமண வீடியோ வெளியீட்டின் தாமதம் குறித்து இப்போது தான் தெரிகிறது. அவரின் வாழ்க்கையை விவரிக்கும் ஆவணப்படமான அதில், முக்கியமான படத்தை தவிர்த்து வெளியிடுவது துரதிஷ்டவசமானது” என ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
தொடக்கத்தில் நயன்தாராவுக்கு ஆதரவான பதிவுகள் வெளியான நிலையில், தற்போது தனுஷுக்கான ஆதரவு சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளது. நெட்டிசன்களை பொறுத்தவரை, “தனுஷ் சினிமா பின்னணி குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் தன்னுடைய கடுமையான உழைப்பினால் முன்னேறியவர். தேசிய விருதுகளை பெற்ற இந்தியாவின் தலைசிறந்த நடிகர். ஹாலிவுட் வரை சென்ற ஒருவரை மட்டுப்படுத்த நயன்தாரா பயன்படுத்தும் வார்த்தைகள் சரியானவை அல்ல” என கருத்து தெரிவித்துள்ளனர்.
» 16 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மம்மூட்டி - மோகன்லால்
» மோகன்லால் நடிகராக அறிமுகமான அதே நாளில் அவர் இயக்கும் படம் ரிலீஸ்
Nayanthara claim that Dhanush is merely a "nepotism product" is not only baseless but also completely uncalled. Such a eacha behaviour from #Nayanthara using his father and brother name.
I stand with #Dhanush here.@dhanushkraja waiting for your reply on this. pic.twitter.com/J8R27deimk— Sophia Vijay (@sansofibm) November 16, 2024
மேலும், “ரூ.6 கோடியில் தொடங்கிய நானும் ரௌடி தான் படத்தின் பட்ஜெட் அதிகரிக்க காரணம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தான். ரூ.6 கோடி தொடங்கி இறுதியில் பட்ஜெட் ரூ.15 கோடி வரை சென்றது. இதனால் தான் தனுஷ் இந்த முடிவை எடுத்துள்ளார்” என தெரிவித்துள்ளனர். “தன்னுடைய ஆவணப்படத்தின் ரீலிஸுக்கான நயன்தாராவின் பப்ளிசிட்டி தான் இந்தக் கடிதம்” என்பதும் நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல், “ஆவணப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் மிகப் பெரிய தொகைக்கு நயன்தாரா விற்றுள்ளார். தனுஷை பொறுத்தவரை அவர் பணம் செலவிட்டு தயாரித்த படத்துக்கான காப்பீடு உரிமையை கேட்கிறார். இதன் மூலம் லாபம் பார்க்க போகும் நயன்தாரா தனுஷை குற்றம்சாட்டுவது நியாமில்லை” என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நயன்தாராவின் ஆவணப்படமான ‘Nayanthara: Beyond the Fairy Tale’ வரும் திங்கள்கிழமை (நவ.18) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா சொல்வது என்ன? - தனுஷுக்கு நயன்தாரா எழுதிய பகிரங்க கடிதத்தில், “நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.
தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என் மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராக லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கெனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது.
கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம். உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம்” என்று நயன்தாரா கூறியுள்ளார். | முழுமையாக வாசிக்க > “நீங்கள் செய்வது பழிவாங்கும் முயற்சி” - தனுஷுக்கு நயன்தாரா பகிரங்க கடிதம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago