பார்வதி முதல் நஸ்ரியா வரை: தனுஷ் விவகாரத்தில் நயன்தாராவுக்கு குவியும் ஆதரவு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான அவரது பதிவுக்கு பல்வேறு நடிகைகள் லைக் செய்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். குறிப்பாக தனுஷுடன் நடித்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தனுஷுக்கு எதிராக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு, நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், நஸ்ரியா, கவுரி கிஷன், காயத்ரி ஷங்கர், நமீதா கிருஷ்ணமூர்த்தி, அபிராமி உள்ளிட்ட பலரும் லைக் செய்துள்ளனர். இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மேற்கண்ட நடிகைகளில் ‘3’ படத்தில் தனுஷுடன் ஸ்ருதி ஹாசனும், ‘மரியான்’ படத்தில் தனுஷுடன் பார்வதியும், ‘கொடி’ படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் நடித்திருந்தது கவனிக்கத்தக்கது. மேலும் ‘நய்யாண்டி’ படத்தில் தனுஷுடன் இணைந்து நஸ்ரியாவும், ‘வடசென்னை’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூம் நடித்திருந்தனர். தனுஷுடன் நடித்த நடிகைகளும் இதற்கு லைக் செய்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் 3 விநாடி ‘நானும் ரௌவுடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். நயன்தாரா வெளியிட்டுள்ள கடிதத்தை முழுமையாக வாசிக்க | > “நீங்கள் செய்வது பழிவாங்கும் முயற்சி” - தனுஷுக்கு நயன்தாரா பகிரங்க கடிதம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

6 mins ago

சினிமா

17 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

மேலும்