‘நல்ல படம் மக்களைக் கண்டிப்பாக சேரும்’ - ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ இயக்குநர் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

விமல், கருணாஸ் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. மைக்கேல் கே ராஜா இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. ஓடிடி-யில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை அடுத்து, புதிய படத்துக்கான கதை விவாதத்தில் இருக்கிறார், இயக்குநர் மைக்கேல் கே ராஜா.

அவர் கூறும்போது, “ஒரு நல்ல படம் மக்களைக் கண்டிப்பாகப் போய்ச் சேரும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். படம் வெளியானதுமே பார்த்துவிட்டு திரைத்துறையினர் பலர் பேசினார்கள். நடிகர் விஜய் சேதுபதி, ‘10 நிமிடம் பார்க்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், கதை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டது. வாழ்த்துகள்’ என்றார்.

இயக்குநர் அகத்தியன் உட்பட பலர் பேசினார்கள். இது தியேட்டருக்கான படம் என்றாலும் ஓடிடி-யில் இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. ஓடிடி தளம் இல்லை என்றால் நான் அடுத்த கட்டத்துக்கு நகர்வது என்பது கடினமாகி இருக்கும். அடுத்து இயக்கும் படத்தை இன்னும் சிறப்பாகப் பண்ண வேண்டிய பொறுப்பை இந்தப் படத்துக்கான வரவேற்பு கொடுத்திருக்கிறது. அதனால் நிதானத்துடன் கவனமாகவும் புதிய படத்துக்கான வேலையில் இருக்கிறேன்” என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்