சென்னை: இரு வழக்குகளில் ரூ.8 கோடியை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியதால் நிபந்தனையுடன் ‘கங்குவா’ படத்தை திட்டமிட்டபடி வெளியிட அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்டு இறந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கடனாக பெற்ற அசல் தொகையான ரூ.10.35 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.36 கோடியாக செலுத்தாமல் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என தடை கோரி உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரூ.20 கோடியை நவ.13-ம் தேதிக்குள் டிபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என தடை விதித்திருந்தனர்.
அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நிரஞ்சன் ராஜகோபாலன், விஜயன் சுப்ரமணியன் ஆகியோர் ரூ.6.41 கோடி சொத்தாட்சியரிடம் செலுத்தப்பட்டு விட்டது எனக்கூறி மனு தாக்கல் செய்தனர். ஆனால், சொத்தாட்சியர் தரப்பில் ரூ.20 கோடியை செலுத்தும் வரை அப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், வரும் டிச.11-ம் தேதிக்குள் ரூ.3.75 கோடியை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், கங்குவா படத்தை வெளியிட அனுமதியளித்து விசாரணையை வரும் டிச.12-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
இதேபோல ப்யூல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.1.60 கோடியை தலைமைப் பதிவாளரிடம் செலுத்தும்படி ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு நீதிபதி அப்துல்குத்தூஸ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அந்த தொகையையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் தலைமைப் பதிவாளரிடம் செலுத்தப்பட்டது. அதையடுத்து கங்குவா படத்தை வெளியிட அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago