இந்திப் படமான ‘கர்ணா’ எப்போதும் தொடங்கும் என்ற கேள்விக்கு சூர்யா பதிலளித்துள்ளார். நீண்ட மாதங்களாக சூர்யா நடிக்கவுள்ள இந்திப் படம் பேச்சுவார்த்தையிலே இருக்கிறது. இது குறித்து எந்தவொரு பேட்டியிலும் சூர்யா பேசியதில்லை. நேற்று (நவ. 12) மும்பையில் ‘கங்குவா’ பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கவுள்ள ‘கர்ணா’ படம் குறித்து சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சூர்யா, “இருவரும் சந்தித்து பேசியது உண்மை. இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்கு நிறைய நேரம் தேவை. அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் படப்பிடிப்பு தளத்துகு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று பதிலளித்தார். இந்தப் பதிலின் மூலம் சூர்யா - ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இருவரும் இணைந்து பணிபுரிய இருப்பது உண்மையாகி இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago