மும்பை: “இந்த 10 வருடங்கள் என்னுடைய சினிமா வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளாக இருக்கும். 6 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். இந்த காலக்கட்டத்தில் சிறந்த இயக்குநர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்களுடன் பயணிக்க விரும்புகிறேன்” என பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “லால் சிங் சத்தா படத்துக்கு முன்பே நான் திரைத் துறையிலிருந்து விலக முடிவு செய்துவிட்டேன். அப்போது நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பயணத்தில் இருந்தேன். கரோனா காலத்தில் தான், நான் ஒன்றை உணர்ந்தேன். அதாவது என்னுடைய 18 வயது தொடங்கி இன்று வரை என்னுடைய முழு இளமை பருவம் உள்ளிட்ட அனைத்தையும் சினிமாவில் கவனம் செலுத்துவதிலேயே கடந்துவிட்டேன். இதனால் என்னால் குடும்பம், குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவிட முடியவில்லை. என்னுடைய முன்னாள் மனைவி ரீனாவாக இருக்கட்டும், கிரண் ராவாக இருக்கட்டும் அவர்களுக்காக நான் நேரம் செலவிட்டதே கிடையாது.
கரோனா நேரத்தில் தான் வாழ்வின் பெரும்பகுதியை சினிமாவுக்கே அர்பணித்து விட்டோம், குடும்பத்தை கவனிக்கவில்லை என்பதை மிகவும் எமோஷனலாக உணர்ந்தேன். இதனால் பெரும் குற்ற உணர்வு என்னை ஆட்கொண்டுவிட்டது. கடந்த 35 ஆண்டுகளாக நான் தேவையான படங்களில் நடித்துவிட்டேன். இனி நான் என் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும். நல்லவேளையாக இதை 56 - 57 வயதிலேயே உணர்ந்துவிட்டேன்.
இந்த முடிவை எடுக்கும்போது, என்னுடைய குழந்தைகள் திரையுலகிலிருந்து விலக வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். அதனால் இந்த 10 வருடங்கள் என்னுடைய சினிமா வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளாக இருக்கும். 6 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். இந்த காலக்கட்டத்தில் சிறந்த இயக்குநர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்களுடன் பயணிக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago