சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா உட்பட பலர் நடித்தப் படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. டி.அருளானந்து தயாரித்த இந்தப் படம், செப்.20-ம் தேதி வெளியானது. இதையடுத்து கிராமத்துப் பின்னணியில், த்ரில்லர் கதையை சீனு ராமசாமி இயக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கோழிப்பண்ணை செல்லதுரை படத்துக்குச் சரியான காட்சிகளும் திரையரங்குகளும் கிடைக்காததால் பெரும்பான்மையான மக்களுக்குச் சென்று சேரவில்லை. படம் வெளியான நாளில் 8 படங்கள் வெளியானதால், பல மாவட்டங்களில் இந்தப் படம் வெளியாக வில்லை. ஆனால் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தயாரிப்பாளரின் நம்பிக்கைக்கு நன்றி.
இதுபோன்ற படங்கள் வெற்றி பெறுவது, நட்சத்திர அந்தஸ்து இல்லாத சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் நாவல், சிறுகதைகளைப் படமாக்குபவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நான்இயக்கிய ‘இடி முழக்கம்’ படத்தின் ரிலீஸ் வேலை நடந்து வருகிறது. ஜனவரியில் புதிய படத்தைத் தொடங்க இருக்கிறேன். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் த்ரில்லர் கதையாக அது இருக்கும்” என்றார்
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago