ஸ்பெயின் நாட்டு பண்ணையில் பணிபுரியும் மோகன்லால் மகன் பிரணவ்!

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் மகனும், நடிகருமான பிரணவ் மோகன்லால், ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணையில் சம்பளம் ஏதுமின்றி பணி செய்து வருகிறார் என அவரது அம்மா சுசித்ரா மோகன்லால் தெரிவித்துள்ளார். யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் இதனை அவர் பகிர்ந்திருந்தார்.

“பிரணவ் (அப்பு), இப்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் சம்பளம் ஏதும் பெறவில்லை. அதற்கு பதிலாக அங்கு தங்குவதற்கு இடமும், உணவும் பெறுகிறார். சமயங்களில் குதிரை, ஆடு போன்றவற்றையும் கவனித்துக் கொள்கிறார். அது அவருக்கு ஒரு அனுபவமாக அமைந்துள்ளது.

பயணம் முடிந்து வீடு திரும்பியதும் அந்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொள்வார். அவர் ஆண்டுக்கு இரண்டு படம் நடிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால், அவர் இரண்டு ஆண்டுக்கு ஒரு படம்தான் நடிக்கிறார். அனைத்தையும் பேலன்ஸ் செய்ய வேண்டும் என அவர் விரும்புகிறார்.

என் கணவரும், மகனும் இணைந்து நடிக்க வேண்டுமென நான் விரும்பவில்லை. ஏனென்றால், யார் நடிப்பு சிறந்தது என்ற ஒப்பீடு மேற்கொள்ளப்படும் என்பது என் கவலை” என சுசித்ரா மோகன்லால் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பிரணவ் மோகன்லால் அறிமுகமானார். பின்னர் 2015-ல் உதவி இயக்குநராக பணியாற்றினார். அவர் நடிப்பில் கடந்த 2018-ல் ‘ஆதி’ திரைப்படம் வெளியானது. 2022-ல் ஹிருதயம், கடந்த ஏப்ரல் மாதம் வர்ஷங்களுக்கு சேஷம் படமும் வெளியானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்