“மம்மூட்டி, ஃபஹத் ஆச்சரியப்படுத்தும் கலைஞர்கள்” - நடிகர் சூர்யா புகழாரம்

By ஸ்டார்க்கர்

சென்னை: “ஆவேஷம் படம் பார்த்தேன் ஃபஹத் கலக்கிவிட்டார். ஒவ்வொருமுறையும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார். மம்மூட்டியின் படத் தேர்வுகள் ஆச்சரியமளிக்கின்றன” என நடிகர் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.

நவம்பர் 14-ம் தேதி சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த பல்வேறு பேட்டிகள் வழங்கியுள்ளார் சூர்யா. அதில் மம்மூட்டி மற்றும் ஃபஹத் ஃபாசில் கதைகள் தேர்வு குறித்து பேசியிருக்கிறார். சமீபத்தில் உங்களுக்கு பிடித்த மலையாள படம் என்ற கேள்விக்கு சூர்யா, “ஆவேஷம்’ திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. அதில் ஃபஹத் ஃபாசில் கலக்கிவிட்டார். ஒவ்வொரு முறையும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் அவர் என்னவாக நடித்திருப்பார் என்று ரசிகர்களுக்கு தெரியாமல் இருப்பதே ஆச்சரியம் தான்.

அதே போல் மம்மூட்டி படங்கள் தேர்வும் ஆச்சரியம் தான். ‘காதல் தி கோர்’ தொடங்கி அவர் நடிக்கும் கதைகள் அனைத்துமே வித்தியாசமானது தான். மக்களை படங்கள் மூலம் மகிழ்விப்பது மட்டுமன்றி, தன்னையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி திரையுலகையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறார். அதில் அவர் ஒரு பெரிய உதாரணம்” என்று புகழ்ந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்