ராஜபாளையம் அருகே ராணுவ கிராம மக்களுக்கு இலவசமாக ‘அமரன்’ திரையிடல்

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ராணுவ வீர்களின் குடும்பத்தினர் அதிகமாக வசிக்கும் 5 கிராம மக்களுக்கு ‘அமரன்’ படத்தை படக்குழுவினர் இலவசமாக திரையிட்டனர்.

ராஜபாளையம் அருகே உள்ள பெருமாள்தேவன்பட்டி, மீனாட்சியாபுரம், சொக்கலிங்கபுரம், ராமலிங்காபுரம், துலுக்கன்குளம் ஆகிய 5 கிராமங்கள் சுதந்திர போரட்ட காலத்தில் இருந்து வீட்டிற்கு ஒருவரை ராணுவத்துக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக இக்கிராமங்கள் ராணுவ கிராமங்கள் என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், ராணுவத்தில் பணியாற்றும்போது வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘அமரன்’ திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனமாக ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ராணுவ கிராம மக்களுக்கு இலவசமாக ராஜபாளையத்தில் உள்ள திரையங்கில் திரையிடப்பட்டது. இதில் இந்த கிராமங்களை சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் திரையரங்கு முன் வைக்கப்பட்டிருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் உருவப்படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தி மரியாதை செய்து விட்டு, திரைப்படம் பார்க்கச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

சினிமா

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்