திரைப்படங்களில் நடிக்க அமைச்சர் சுரேஷ் கோபிக்கு தடை

By செய்திப்பிரிவு

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழில் அஜித்தின் தினா, ஷங்கரின் ஐ, விஜய் ஆண்டனியின் தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர், கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

சில மலையாளப் படங்களில் ஏற்கெனவே நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததால், தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றும் நடிப்புதான் முக்கியம், விரைவில் அதற்கு அனுமதி கிடைக்கும் என நம்புவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் சுரேஷ் கோபி கூறியிருந்தார். ஆனால் அவர் படங்களில் நடிக்க மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது.

திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விட்டு அமைச்சர் பணியில் கவனம் செலுத்துமாறு சுரேஷ் கோபிக்கு, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே ‘ஒற்றக்கொம்பன்’ என்ற படத்துக்காக சில வருடங்களாகத் தாடி வளர்ந்து வந்தார்.

இது அவருடைய250-வது படம். இதன் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க இருந்தது. ஆனால், வளர்த்து வந்த தாடியை திடீரென எடுத்து விட்ட சுரேஷ் கோபி, தனது புதிய புகைப்படத்தை வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்