சூர்யாவின் ‘கங்குவா’ படத்துக்கு தடை கோரி வழக்கு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’படத்துக்கு தடை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கான பாக்கித் தொகை நாளைக்குள் வழங்கப்படும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டுடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனத்தின் ஞானவேல்ராஜா, ‘டெடி -2’, ‘எக்ஸ் மீட்ஸ் ஒய்’, ‘தங்கலான்’ ஆகிய படங்களுக்கான தயாரிப்பு பணிகளுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.99.22 கோடியை கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரூ.45 கோடியை திருப்பி செலுத்திய ஞானவேல் ராஜா, எஞ்சிய ரூ.54 கோடியை திருப்பி செலுத்தாமல் ஒப்பந்த விதிகளை மீறிவிட்டதாகவும், எனவே இந்த தொகையை திருப்பிக் கொடுக்காமல் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதேபோல நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை கோரியும் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரிலையன்ஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், “ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில் ரூ.18 கோடியை மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் செலுத்திவிட்டதால், தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட எந்த ஆட்சேபமும் இல்லை” என்றார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், “ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை நாளைக்குள் (நவ.8) வழங்கப்படும்” என உறுதியளித்தார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, பாக்கித் தொகையை திருப்பிச் செலுத்தியது குறித்து தெரிவிக்கும் வகையில் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்