சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ.170 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அமரன்’. இந்தப் படத்தில் சாய் பல்லவி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் நாள் ரூ.45 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்தது. அண்மையில் படக்குழு சார்பில் வெற்றி விழா நிகழ்வும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 6 நாட்களை கடந்த நிலையில், உலகம் முழுவதும் படம் ரூ.170 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.115 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ஒரு வாரம் மற்ற படங்களில் ரிலீஸ் இல்லாததால் ‘அமரன்’ படத்தின் வசூல் இன்னும் கூடலாம் என கணிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago