‘லக்கி பாஸ்கர்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் தனுஷ்.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’. பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தினை தனுஷ் பார்த்துவிட்டு, படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார். ஒவ்வொரு துறையினரும் எப்படி பணிபுரிந்துள்ளனர் என்பதை குறிப்பிட்டு பேசியது குறித்து படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தினை இயக்கியவர் வெங்கி அட்லுரி. அப்படத்தின் மூலம் இருவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள். அதுமட்டுமன்றி ‘லக்கி பாஸ்கர்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை. இப்போது தொடர்ச்சியாக தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்து பணிபுரிந்து வருகிறது.
தமிழகத்தில் ‘லக்கி பாஸ்கர்’ படத்துக்கு திரையரங்குகள் கணிசமான அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இப்படத்தினை வாங்கி வெளியிட்ட ராக்போர்ட் நிறுவனம் இப்போதே லாபம் கிடைக்க தொடங்கிவிட்டது. இதனால் இதன் இறுதி ஓட்டத்தில் ராக்போர்ட் நிறுவனத்துக்கு பெரும் லாபம் ஈட்டிய படமாக ‘லக்கி பாஸ்கர்’ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago