‘அமரன்’ அற்புதமான படம் என்று சிம்பு தெரிவித்துள்ளார். ‘அமரன்’ படத்தை பார்த்துவிட்டு பல்வேறு திரையுலகினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தற்போது படம் பார்த்துவிட்டு சிம்பு பாராட்டியுள்ளார்.
“நான் ’அமரன்’ படத்தை முழு மனதுடன் ரசித்தேன். ராஜ்குமார் மற்றும் குழுவினரிடமிருந்து ஒரு அற்புதமான படம். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் அட்டகாசமாக நடித்து திரைக்கு மிகுந்த ஆழமான அர்ப்பணிப்பை வழங்கியுள்ளனர்.
உயர்தரமான தயாரிப்பு மதிப்பீடுகளுக்காக கமல்ஹாசன் மற்றும் மகேந்திரனுக்கு ஹேட்ஸ் ஆஃப். ஒவ்வொரு காட்சியையும் ஜிவி பிரகாஷின் இசை உயர்த்துகிறது. எடிட்டர் கலைவாணன், கண்கவர் விசுவல்களுக்காக ஒளிப்பதிவாளர் சாய், விறுவிறுப்பான ஸ்டண்ட் காட்சிகளுக்காக அன்பறிவ் மாஸ்டர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
ஒரு உண்மை சம்பவத்தை தழுவி அதை தனித்துவமான கலைநயத்துடன் உருவாக்கிய ராஜ்குமாரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அவரது கடின உழைப்பும், ஒவ்வொரு நிமிடத்திலும் செலுத்திய கவனமும் இந்த கதைக்கு உயிரூட்டியுள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கு வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கேரளா உள்ளிட்டவற்றிலும் ‘அமரன்’ படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் வட அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலையும் கடந்துள்ளது ‘அமரன்’.
முக்கிய செய்திகள்
சினிமா
43 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago