“சிங்கம் அகெய்ன் எனது 10வது ரூ.100 கோடி கிளப் படம்” - ரோஹித் ஷெட்டி பெருமிதம்

By செய்திப்பிரிவு

மும்பை: கடந்த நவம்பர் 1-ம் தேதி பாலிவுட்டில் வெளியான ‘சிங்கம் அகெய்ன்’ திரைப்படம் விரைவாக ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ள நிலையில், “இது என்னுடைய 10-வது ரூ.100 கோடி கிளப் திரைப்படம்” என இயக்குநர் ரோஹித் ஷெட்டி பெருமை தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியானது ‘சிங்கம்’ திரைப்படம். 2014-ல் ‘சிங்கம் ரிட்டர்ன்’ வெளியானது. இரண்டு படங்களும் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவித்தன. தற்போது இதன் சீக்வலாக ‘சிங்கம் அகெய்ன்’ 3-வது பாகமாக உருவாகியுள்ளது. அதில் அஜய் தேவ்கன், கரீனா கபூர், தீபிகா படுகோன், ஜாக்கி ஷெராஃப், டைகர் ஷெராஃப், ரன்பீர் கபூர், அக்‌ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விரைவாக ரூ.100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, “ரூ.100 கோடி வசூலை எட்டிய என்னுடைய 10-வது திரைப்படம் இது. என்னுடைய 16 படங்களிலும் தொடர்ச்சியாக பார்வையாளர்களின் அன்பும், வரவேற்பும் தொடர்ச்சியாக எனக்கு கிடைத்து வருகிறது. அதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

ரோஹித் ஷெட்டியின் ரூ.100 கோடி கிளப் படங்கள்: கோல்மால் 3 (2010), சிங்கம் (2011), போல் பச்சன் (2012), சென்னை எக்ஸ்பிரஸ் (2013), சிங்கம் ரிட்டர்ன்ஸ் (2014), தில்வாலே (2015), கோல்மால் அகெய்ன் (2017), சிம்பா (2018), சூரியவன்ஷி (2021), ‘சிங்கம் அகெய்ன் (2024).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்