மும்பை: தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டீசர் எப்படி?: “எறும்பு தனியே இருக்கும்போது அதை எளிதாக கசக்கி தூக்கி எறிந்துவிடலாம். அதே எறும்பு கூட்டமாக இருக்கும்போது யானையை கூட அதனால் வீழ்த்த முடியும்” என தத்துவ வரிகளுடன் டீசர் தொடங்குகிறது. ‘தெறி’ படத்தின் களத்தில் இந்தி ரசிகர்களுக்கு ஏற்றார்போல சில மாற்றங்கள் அரங்கேறி இருப்பதை உணர முடிகிறது. இதில் பில்டப் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கின்றன. வருண் தவணுக்கு அப்பா கதாபாத்திரமும், போலீஸ் கதாபாத்திரமும் கச்சிதமாக பொருந்துகிறது. ஜாக்கி ஷெராஃபின் வில்லத்தனம் மிரட்டுகிறது. எல்லாவற்றையும் தாண்டி தமன் இசை தனித்து தெரிவது ப்ளஸ். படம் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேபி ஜான்: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘தெறி’. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், நடிகை மீனா மகள் நைனிகா, மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. விஜய் நடித்த கேரக்டரில் வருண் தவண் நடித்துள்ளார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வாமிகா நடித்துள்ளனர். இந்தப் படத்தை சினிஒன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் சார்பில் அட்லீயின் மனைவி ப்ரியா தயாரிக்கிறார். காளீஸ் இயக்குகிறார். இவர் ஜீவா நடித்த ‘கீ’படத்தை இயக்கியவர். தமன் இசையமைக்கிறார். டீசர் வீடியோ:
» ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ பட இசையமைப்பாளராக சாய் அபயன்கர் ஒப்பந்தம்
» விஜய் தேவரகொண்டா உடன் நடிக்க ‘மம்மி’ பட வில்லனிடம் பேச்சுவார்த்தை!
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago