ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ பட இசையமைப்பாளராக சாய் அபயன்கர் ஒப்பந்தம்

By ஸ்டார்க்கர்

சென்னை: ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயன்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ‘கட்சி சேர’ ஆல்பம் பாடல் மூலம் கவனம் பெற்றவர்.

எல்சியு படங்களில் அடுத்ததாக உருவாக இருக்கிறது ‘பென்ஸ்’. இதில் லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கவுள்ளது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. தற்போது இதன் இசையமைப்பாளராக சாய் அபயன்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் வைரலான ‘கட்சி சேர’ மற்றும் ‘ஆசக் கூட’ ஆகிய பாடல்கள் மூலம் இணையத்தில் பிரபலமானவர் சாய் அபயன்கர். இந்த இரண்டு பாடல்களுமே இசை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

மேலும் பிரபல பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி தம்பதியினரின் மகன் தான் சாய் அபயன்கர் என்பது நினைவுக் கூரத்தக்கது. இவர் தான் ‘பென்ஸ்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட், ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘பென்ஸ்’ படத்தை தயாரிக்கவுள்ளது. லோகேஷ் கனகராஜின் கதையை பாக்கியராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். லாரன்ஸ் உடன் நடிக்கும் இதர நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்