ஜோதிகா உடனான காதல் குறித்து பேட்டியொன்றில் சூர்யா பேசியிருக்கிறார்.
தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று சூர்யா – ஜோதிகா. 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது மும்பையில் குடியேறி விட்டாலும், தமிழில் தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து வருகிறார்கள்.
2டி நிறுவனத்தில் தயாரிப்பாளர்கள் பெயரில் ஜோதிகாவின் பெயரை முன்னால் போட்டு, பின்பு தனது பெயரைப் போட்டு காதலை வெளிப்படுத்தியவர் சூர்யா. தற்போது ‘கங்குவா’ படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ஜோதிகா உடனான காதல் குறித்து பேசியிருக்கிறார்.
ஜோதிகா உடனான காதல் குறித்து சூர்யா, “மும்பையில் பிறந்து வளர்ந்தவர் ஜோதிகா. இந்தியில் ஒரு படத்தில் நடித்துவிட்டு 18 வயதில் சென்னை வந்தார். தமிழில் நாயகியாக என்னுடன் தான் முதல் படத்தில் நடித்தார். பின்பு இருவரும் இணைந்து 6 படங்களில் நடித்தோம். நண்பர்களாக இருவருமே ஒருவருடைய பணியை மதித்தோம். அப்படியே காதல் உருவானது. இருவருமே காதலை வெளிப்படுத்தவில்லை என்பது தான் உண்மை. இருவருமே ஒருவர் இல்லாமல் ஒருவர் இருக்க முடியாது என்பதை உணர்ந்தோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago