“முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம்.” என ‘மெய்யழகன்’ படத்தைப் பாராட்டியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
ஓடிடி தளத்தில் ‘மெய்யழகன்’ பார்த்துவிட்டு அன்புமணி ராமதாஸ் புகழாரம் சூட்டியிருக்கிறார். பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சுவாமி நடிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. திரையரங்கில் வெளியாகி பெற்ற வரவேற்பினை விட ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. 2டி நிறுவனம் இதனை தயாரித்து வெளியிட்டது.
தற்போது ஓடிடி தளத்தில் ‘மெய்யழகன்’ படத்தைப் பார்த்துவிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இப்படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ’மெய்யழகன்’ திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன்.
முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம்.
எனது சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக எனக்குள் கொண்டுவந்த படம். நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் சி.பிரேம்குமார் பார்வையாளர்களை உறவுக்கூட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago