நடிகர் ரஹ்மான் தமிழ், மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள ‘1000 பேபிஸ்’ என்ற வெப் தொடர், ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இதில் இந்தி நடிகை நீனா குப்தா, ஜாய் மாத்யூ, அஸ்வின் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். நஜீம் கோயா இயக்கியுள்ள இதில் விசாரணை அதிகாரியாக ரஹ்மான் நடித்துள்ளார்.
போலீஸ் கேரக்டரில் மீண்டும் நடித்தது ஏன் என்பது பற்றி அவரிடம் கேட்டபோது, “எங்களைப் போன்ற கமர்ஷியல் நடிகர்களுக்கு சின்னத்திரை அல்லது ஓடிடி தளங்களில் நடிக்க தயக்கம் இருக்கிறது. ஆனால், அதுதான் எதிர்காலம் என்பதுஎனக்கு தெரியும். அதனால் நடித்தேன். இப்போது மலையாளம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளில் இருந்தும் வெப் தொடர்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. இப்போது கூட பிரபல தமிழ் இயக்குநரின் வெப் தொடரில் நடிக்க இருக்கிறேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
‘1000 பேபிஸ்’ தொடரில் போலீஸ் வேடத்தில்தான் நடித்துள்ளேன். இனி போலீஸ் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று ஏற்கெனவே அறிவித்தாலும் இதன் இயக்குநர் என்னிடம் கதை சொன்னபோது, அது வழக்கமான போலீஸ் வேடம் இல்லை என்பது தெரிந்ததால் ஒப்புக்கொண்டேன்” என்றார்
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
32 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
49 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago