நடிகை டாப்ஸி பன்னு இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்து வரும் அவர், ஷாருக்கானுடன் டங்கி, வருண் தவணுடன் ஜுட்வா 2 படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பெரிய ஹீரோ படங்களில் நாயகிகளைத் தேர்வு செய்வதில் கதாநாயகர்களின் தலையீடு இருக்கிறது என்று டாப்ஸி புகார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “டங்கி, ஜுட்வா 2 போன்ற படங்களில் நான் அதிக சம்பளம் வாங்கி இருப்பதாக நினைக்கிறார்கள். அதில் உண்மையில்லை. நான் முதன்மை பாத்திரத்தில் நடித்த ‘ஹசீன் தில்ரூபா’ போன்ற படங்களில் கூட இதை விட அதிக சம்பளம் வாங்கி இருக்கிறேன். ஆனால், பெரிய ஹீரோ படங்களில் அப்படிக் கிடைப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் முன்னணி ஹீரோ படத்தில் நடிக்க வாய்ப்பளித்து எனக்கு உதவி செய்வதாக நினைக்கிறார்கள்.
‘ஏற்கெனவே பிரபல ஹீரோ இருக்கிறார். பிறகு அதிக சம்பளம் வாங்கும் நாயகி எதற்கு?’ என நினைக்கிறார்கள். இந்தக் கருத்துகளுக்கு எதிராகத்தான் தினமும் போராடுகிறேன். இதுபோன்ற படங்களில் நாயகி யார் என்பதையும் ஹீரோக்களே முடிவு செய்கிறார்கள் என்பது பார்வையாளர்களுக்கே தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
59 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago