தடங்கலின்றி தொடங்குமா ‘STR 48’?

By ஸ்டார்க்கர்

‘STR 48’ திரைப்படம் தடங்கலின்றி தொடங்குமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. கமல் மற்றும் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. அதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதன் படப்பிடிப்பு ‘டிராகன்’ படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கும் என கூறப்படுகிறது.

ஆனால், ‘STR 48’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில பிரச்சினைகளை சிம்பு முடிக்க வேண்டும் என்கிறார்கள் திரையுலகினர். ஏனென்றால் வேல்ஸ் நிறுவனம் சிம்புவின் மீது புகார் அளித்துள்ளது. அதுமட்டுமன்றி சிம்புவின் மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார்கள்.

’தக் லைஃப்’ படத்தின் தயாரிப்பாளர் கமல் என்பதால் எந்தவித பிரச்சினையுமின்றி விட்டுவிட்டார்கள். ஆனால், புதிய படம் தொடங்கும் முன்பு வேல்ஸ் நிறுவனத்தின் பிரச்சினையை முடித்தாக வேண்டும். அதனைத் தொடர்ந்தே ‘STR 48’ தொடங்கப்படும் என்றே தெரிகிறது. இதனை முடித்தவுடன் ‘STR 49’ படத்தை தொடங்கவுள்ளார் சிம்பு. இதனை தேசிங்கு பெரியசாமி தயாரிக்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்