ரூ.100 கோடியை தாண்டிய ‘அமரன்’ வசூல் - தொடரும் சாதனை

By ஸ்டார்க்கர்

சென்னை: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூலால், ரூ.100 கோடியை கடந்துள்ளது ‘அமரன்’ திரைப்படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. சோனி நிறுவனம், கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற ‘அமரன்’ தற்போது வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உலகமெங்கும் ஒட்டுமொத்த வசூலில் முதல் நாளில் ரூ.42.3 கோடி வசூல் செய்ததாக ‘அமரன்’ படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. தமிழகத்தில் முதல் நாளை விட 2-ம் நாள் வசூல் அதிகம். அதை விட 3-ம் நாள் வசூல் அதிகம் என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமன்றி உலகமெங்கும் ஒட்டுமொத்த வசூலில் 3 நாட்களில் சுமார் ரூ.100 கோடியை கடந்துவிட்டது ‘அமரன்’. இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய படங்கள் ரூ.100 கோடியை கடந்துள்ளது. அதில் ‘டாக்டர்’ படம் 25 நாட்களிலும், ‘டான்’ படம் 12 நாட்களிலும் கடந்தது. இப்போது அதே ரூ.100 கோடியை 3 நாட்களில் கடந்துள்ளது ‘அமரன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்