‘புஷ்பா 2’ பாடலுக்கு ஸ்ரீலீலா நடனம்!

By ஸ்டார்க்கர்

‘புஷ்பா 2’ படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரீலீலா நடனமாட சம்மதம் தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா 2’. முதல் பாகமான ‘புஷ்பா’ உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்தது. இதில் ‘ஊ அண்டாவா’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். இப்பாடலின் வரிகள், நடனம் என அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடினார்கள்.

அதேபோல் ‘புஷ்பா 2’ படத்திலும் ஒரு பாடல் இருக்கிறது. இதில் நடனமாட முன்னணி நாயகிகள் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. ஆனால், யாரிடமும் தேதிகள் இல்லை, படப்பிடிப்பும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு படக்குழு தள்ளப்பட்டது. ஏனென்றால் டிசம்பர் 5-ம் தேதி ‘புஷ்பா 2’ வெளியாக இருக்கிறது.

இதனால் ‘புஷ்பா 2’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவருடைய நடனத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. அல்லு அர்ஜுன் - ஸ்ரீலீலா இருவரும் நடனமாடினால் கண்டிப்பாக பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என கருதியிருக்கிறது படக்குழு. விரைவில் அல்லு அர்ஜுன் - ஸ்ரீலீலா நடனமாடும் பாடலை ஹைதராபாத்தில் அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்த உள்ளது ‘புஷ்பா 2’ படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

26 mins ago

சினிமா

35 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்