வழக்கறிஞர் படிப்பை முடிக்காவிட்டாலும் எதற்கெடுத்தாலும் ‘லா பாயின்ட்’ பேசுபவர்கார்த்தி (ஜெயம் ரவி). அவரால் வீட்டில் பிரச்சினை. அவரைத் திருத்துவதற்காக, ஊட்டியில் இருக்கும் அக்கா ஆனந்தி (பூமிகா), கார்த்தியை அங்கு அழைத்துச் செல்கிறார்.
அவருடைய செயல்பாடுகளால் அக்கா குடும்பமும் இரண்டாகிறது. கார்த்தியை எல்லோரும் வெறுக்கிறார்கள். அப்போது தன்னை பற்றிய உண்மை ஒன்று தெரிய வருகிறது அவருக்கு. இதையடுத்து பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்து, நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்கிறார் கார்த்தி. அதில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பதுதான் கதை.
ரத்தக் களறி, வெட்டுக் குத்து படங்களாக வந்துகொண்டிருக்கும் காலத்தில், குடும்பக் கதையைத் தேர்வு செய்து இயக்கியிருக்கும் ராஜேஷ். எம்-மை பாராட்டலாம். முதல் பாடலாக வரும் மக்காமிஷி, நாயகனின் குணநலன்களை விவரிக்கும் வகையில் எழுதியிருப்பதால், தொடக்கத்திலே திரைக்கதையின் போக்கை ஊகிக்க முடிகிறது.
பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் குடும்ப உறுப்பினர் ஒருவர் பேசினால், குடும்ப அமைப்புக்குள் என்ன சிக்கல்கள் எழும் என்பதை இயல்பாகக் காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறார் இயக்குநர். முதல் பாதியை கேலி, கிண்டல் என நகர்த்தியிருக்கிறார்கள். அது ஓவர் டோஸ் ஆகிவிடுவது பெரும் குறை.
» ‘பிசாசு 2’ படத்தை வெளியிட இடைக்கால தடை
» மாற்றுத் திறனாளிகள் சான்று பெற சென்னையில் நவ.15 வரை சிறப்பு முகாம்
கார்த்தி, வேலைக்கு சேருமிடங்களில் தன் வேலையை உணராமல் செயல்படுவது போல வரும் காட்சிகள் மிகையானது. குடும்பத்தில் கணவன், மாமனார் இடையே வரும் சிறிய சண்டையால் மனைவி பிரிந்துவிடுவது போன்ற காட்சியும் ஒட்டவில்லை. பள்ளி நாடகத்தில் பிள்ளைகளின் நடிப்பைப் பார்த்து பிரிந்தவர்கள் சேர்வதும் பழைய ஸ்டைல்.
அக்கா குடும்பத்தால் விமர்சிக்கப்படும் நாயகனை, அதே வீட்டிலிருக்கும் நாயகி காதலிப்பது லாஜிக்கே இல்லாத ஓட்டை. பெரிய உண்மையை நாயகனுக்குப் போகிற போக்கில் அவருடைய தந்தை சொல்வதில் மாற்று உத்திகளை இயக்குநர் யோசித்திருக்கலாம். அதே நேரம், ராஜேஷ்.எம். அளிக்கும் நகைச்சுவை மிஞ்சிய படங்கள் அனைத்திலுமே எடுத்துக் கொள்ளப்படும் லாஜிக் ஓட்டை சுதந்திரம் போலத்தான் இதிலும் என்பதைக் கருத்தில் கொண்டு மன்னிக்கலாம்.
கடைசியில் வரும் ட்விஸ்ட் ரசிக்க வைக்கிறது என்றாலும் முன்னாள் ஆட்சித் தலைவர் ஒருவரை கடத்தும் அளவுக்கு யோசித்திருப்பது அதீத கற்பனை.
கார்த்தி கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ‘லா’ பேசி லூட்டி அடிப்பது தொடங்கி உண்மை தெரியும்போது உருகி, மருகுவது என நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார் பிரியங்கா மோகன். அக்கா கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருந்தாலும், பூமிகாவுக்கு இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். விடிவி கணேஷின் நகைச்சுவை சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. ராவ் ரமேஷ், நட்டி, சரண்யா பொன்வண்ணன், அச்யுத்குமார், சீதா, சதீஷ் கிருஷ்ணன் ஆகியோரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மக்காமிஷி’ ரசிக்க வைக்கிறது. விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதில் ஊட்டி ஃபிரெஷ்சாக இருக்கிறது. அபிசிஷ் ஜோசப்பின் படத்தொகுப்பில் குறையில்லை. குடும்பக்கதைக்குரிய அம்சங்கள் அழகாக இருந்தாலும் கதாபாத்திரங்களின் நாடகத் தன்மையால் இந்த ‘பிரதர்’ சீரியல் உணர்வைத் தருகிறான்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
12 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago