சென்னை: மக்களிடையே வரவேற்பு மிகுந்துள்ளதால் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்துக்கு திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’. தெலுங்கில் உருவாக்கப்பட்ட இப்படம் இதர மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை தமிழகத்தில் ராக்போர்ட் நிறுவனம் வெளியிட்டது. தமிழகத்திலும் PAID PREMIERE முறையில் ‘லக்கி பாஸ்கர்’ சுமார் 50-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிட்டார்கள்.
விமர்சனம் ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் ‘லக்கி பாஸ்கர்’ படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் முதலில் 147 திரையரங்குகளில் திரையிடப்பட்ட ‘லக்கி பாஸ்கர்’ தற்போது 200-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரையரங்குகள் அதிகரிப்பால் ராக்போர்ட் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் திரையரங்குகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஏனென்றால் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ மற்றும் கவின் நடித்துள்ள ‘ப்ளடி பெக்கர்’ ஆகிய இரண்டு படங்களுமே மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. உலகளவில் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் மொத்த வசூலாக 12.7 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். | வாசிக்க > லக்கி பாஸ்கர் - திரை விமர்சனம்
முக்கிய செய்திகள்
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago