சென்னை: ’அமரன்’ திரைப்படம் எந்தத் துறை சார்ந்தவர்களுக்கும் ஓர் உத்வேகத்தை கொடுக்கும் என நினைக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘அமரன்’ படத்தினை சோனி நிறுவனம், கமல் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்தினை தமிழக முதல்வர், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.
இன்று (அக்.31) காலை ‘அமரன்’ படத்தை மக்களுடன் கண்டுகளித்தார் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், “அனைத்து தரப்பு மக்களும் பார்க்கக்கூடிய படம் தான் ‘அமரன்’. நாம் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் எல்லையில் தியாகம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அனைவரும் உணர்ந்துக் கொள்ளும் படமாக ‘அமரன்’ இருக்கும்.
தமிழக முதல்வர் ‘அமரன்’ படத்தைப் பார்த்தார்கள். ஒரு நல்ல கதையை அற்புதமாக எடுத்துள்ளீர்கள். மிகவும் எமோஷனலாக இருந்தாக சொன்னார்கள். படத்தில் அனைவருடைய உழைப்பும் தெரிவதாகவும் குறிப்பிட்டார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரரின் மகத்தான சாதனையை புரிந்து படத்தை எடுத்துள்ளீர்கள் என்று அனைவரையுமே பாராட்டினார்கள். அது ஒரு பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது.
» எனது சிம்பொனி இசை ஜனவரி 26-ல் வெளியிடப்படும்: இளையராஜா அறிவிப்பு
» ஃபஹத் ஃபாசிலுடன் பைக்கில் வடிவேலு: கவனம் ஈர்க்கும் ‘மாரீசன்’ தீபாவளி போஸ்டர்!
கமல் படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது, மக்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம் என்றார்கள். அதை தெரிந்து கொள்ள தான் மக்களுடன் இப்போது ‘அமரன்’ பார்த்தேன். இது மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் ரெபேக்கா என இருவருடைய வாழ்க்கை. அதை அனைவரும் சேர்ந்து சரியாக பதிவு செய்திருக்கிறோம் என நம்புகிறேன். மக்கள் அளிக்கும் கைதட்டல் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையாக பார்க்கிறேன். இந்தப் படம் எந்தத் துறை சார்ந்தவர்களுக்கும் ஓர் உத்வேகத்தை கொடுக்கும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார். > விமர்சனத்தை வாசிக்க > அமரன் Review: சிவகார்த்திகேயனின் ‘புதிய’ பாய்ச்சல் எப்படி?
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago