தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் நித்யா மேனன், ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காகத் தேசிய விருது பெற்றார். இப்போது தனுஷுடன் மீண்டும் நடித்து வரும் அவர், ‘மிஷன் மங்கள்’ படத்துக்குப் பிறகு இந்தி வாய்ப்பு வராதது ஏன்? என்பது பற்றிக் கூறியதாவது:
‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் கதையை, தனுஷ் முழுவதுமாகச் சொல்லவில்லை. இது என்ன மாதிரியான படம் என்பதை தொலைபேசியில் 15 நிமிடம்தான் சொன்னார். ஹீரோயிச ஆக்ஷன் படங்கள் வரவேற்பைப் பெற்ற நேரத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ இனிமையான படமாக இருந்தது. சிறந்த நடிப்பைக் காண்பிக்க சோகமான, மனச்சோர்வுடைய கதாபாத்திரங்களில்தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த கதாபாத்திரம் மூலமும் நிரூபிக்க முடியும்.
இந்தியில் ‘மிஷன் மங்கள்’ படத்துக்குப் பிறகு வாய்ப்பு வரவில்லை. எந்த மொழியிலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். புதிய மொழிகளில் நடிப்பதை விரும்புகிறேன். தேசிய விருது பெற்றதன் மூலம் இந்தி வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். இவ்வாறு நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
46 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago