விஜய் படங்கள் போலவே ‘ஒன் மேன் ஷோ’ மாநாடு: ராதிகா கருத்து

By ஸ்டார்க்கர்

விஜய்யின் படங்கள் மாதிரியே ஒன் மேன் ஷோவாக மாநாட்டையும் காட்டியிருக்கிறார் என்று ராதிகா கருத்து தெரிவித்துள்ளார். ‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சுக்கு விமர்சனங்களும், ஆதரவும் ஒரே சேர கிடைத்து வருகின்றன. குறிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற அறிவிப்பு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தவெக மாநாடு மற்றும் விஜய்யின் பேச்சு குறித்து பாஜக கட்சியைச் சேர்ந்தவரும் நடிகையுமான ராதிகா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “விஜய்க்கு எனது வாழ்த்துகள். மக்களுக்கு நல்லது செய்ய அவருடைய கொள்கைகளை முன்னிறுத்தி வந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்... அதையும் மீறி அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தது ஆச்சரியமாக இருந்தது. சிறுவயதிலிருந்து விஜய்யை தெரியும். பாஜகவை தாக்கி பேசுவதற்கு கொஞ்சம் யோசித்து பேசுவார் என நினைக்கிறேன். அதிமுகவை தாக்கி ஏன் பேசவில்லை என தெரியவில்லை.

ஏனென்றால் அவருடைய கண்ணோட்டம், பார்வை என அரசியலை வேறு விதமாக பார்க்கிறார் விஜய். அவரை நாயகனாக்க எஸ்.ஏ.சி எவ்வளவு தியாகம் செய்தார் என்பதை நேரடியாக பார்த்திருக்கிறேன். பெரிய நாயகனாக ஆனவுடன் அவரோடு ’தெறி’ படத்தில் நடித்தேன். பெரிதாக பேசவே மாட்டார். எப்போதுமே அமைதியாக இருப்பார். திடீரென்று இப்படி பரிமாணத்தில் பார்த்தது, வேறொரு விஜய்யை பார்த்தது மாதிரி இருந்தது. அவருடைய படங்கள் மாதிரியே ஒன் மேன் ஷோவாக மாநாட்டையும் காட்டியிருக்கிறார். அடுத்து அவருடைய கட்சிக்காரர்களை அடையாளம் காட்டி என்ன பண்ணப் போகிறார் என்பதைப் பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார் ராதிகா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்