‘கூலி’க்குப் பிறகு ‘ஜெயிலர் 2’ - ரஜினி முடிவு

By ஸ்டார்க்கர்

‘கூலி’ படத்துக்கு பின்பு ‘ஜெயிலர் 2’ படத்தினைத் தொடங்க ரஜினி முடிவு செய்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இதில் சண்டைக் காட்சி ஒன்றினை படமாக்கி வருகிறது படக்குழு.

‘கூலி’ படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதிவரை நடைபெறவுள்ளது. அதற்கு பின் சில வாரங்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார் ரஜினி. அதனைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கே தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் ரஜினி. நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்குள் நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்பு இடங்கள் தேர்வு ஆகியவை நடைபெறவுள்ளது.

இதில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட அனைவருமே நடிக்கும் வகையில் கதையினை உருவாக்கி இருக்கிறார் நெல்சன். முதல் பாகத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்தவர்கள், இதில் அதிகப்படியான காட்சிகளில் இடம்பெறுவது போல் திரைக்கதையை உருவாக்கியுள்ளார் நெல்சன். விரைவில் ரஜினியை சந்தித்து இறுதி திரைக்கதை வடிவத்தினை சொல்லவுள்ளார் நெல்சன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்