‘கங்குவா 2’ எப்போது? - படக்குழுவின் ப்ளான் விவரம்

By ஸ்டார்க்கர்

‘கங்குவா 2’ படத்தினை எப்போது தொடங்கி, எப்போது வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளதால், பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது படக்குழு.

‘கங்குவா’ முதல் பாகத்தின் முடிவில் கார்த்தி கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை படக்குழு உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இதன் தகவல் இணையத்தில் வெளியாகிவிட்டது. படத்தின் டீஸரில் இறுதியில் வருபவர் கார்த்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கங்குவா’ 2-ம் பாகத்தில் சூர்யா - கார்த்தி இருவரும் மோதுவது தான் கதையாக உருவாக்கி வைத்துள்ளார் சிவா. இதற்கான கதை, திரைக்கதை என அனைத்தையும் முடித்துவிட்டார். ஆனால், அடுத்ததாக அஜித் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அஜித் படத்தினை முடித்துவிட்டு தான் ‘கங்குவா 2’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் சிவா. இதன் படப்பிடிப்பு 2026-ம் ஆண்டு தான் தொடங்கவுள்ளது. 2027-ம் ஆண்டு வெளியிட்டு விட வேண்டும் என படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதற்கு தகுந்தாற் போல் சூர்யா - கார்த்தி இருவரிடமும் தேதிகள் பேசி வருகிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்