சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை’ வரிசை படங்கள் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்தப் படத்தின் 4-ம் பாகம் கடந்த மே மாதம் வெளியாகி வசூல் அள்ளியது. இதில், தமன்னா, ராஷி கன்னா, கோவை சரளா, யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்தனர்.
இதையடுத்து ‘அரண்மனை 5’ படத்தைக் கண்டிப்பாக இயக்குவேன் என சுந்தர்.சி கூறியிருந்தார். இந்நிலையில் ‘அரண்மனை 5’ படத்தின் முதல் தோற்றம் என சில போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதுகுறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், “அரண்மனை 5 படம் குறித்து ஏராளமான செய்திகளும் யூகங்களும் வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் படம் தொடர்பாக வெளியாகி வரும் புகைப்படங்கள், நடிகர், நடிகைகள் பற்றிய விவரம், போஸ்டர் டிசைன் அனைத்தும் போலியானவை. அந்தப் படத்தைத் தொடங்கும்போது சுந்தர்.சியும் அவ்னி சினிமேக்ஸும் அதுபற்றி தெரிவிக்கும். இப்போது ‘கேங்கர்ஸ்’ படத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago