எம்.ஜி.ஆர் ஆடிய சிவதாண்டவம்! - ஸ்ரீமுருகன்

By செய்திப்பிரிவு

தென்னிந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம், ‘ஸ்ரீமுருகன்’. 1944-ம் ஆண்டில் அதற்கான விளம்பரம் வெளியானது. பாகவதர் ஒரு வெள்ளைக் குதிரையில் ஸ்டைலாக அமர்ந்திருப்பதைப் போல வெளியாகி இருந்தது அந்த விளம்பரம். பாகவதரின் நண்பரும் இயக்குநருமான ராஜா சந்திரசேகர் இயக்குவதாகவும் கோவை ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. கதை, வசனத்தை ஏ.எஸ்.ஏ. சாமி எழுதினார்.

அப்போது தியாகராஜ பாகவதரின், ஹரிதாஸ் 3 தீபாவளியாக ஓடி சாதனை படைத்ததால் இந்தப் படத்தில் அவரின் தலையீடு அதிகம் இருந்ததாகச் சொல்வார்கள். வள்ளியாக வசுந்தரா தேவியையும் (வைஜெயந்தி மாலாவின் தாயார்)தெய்வானையாக டி.ஆர்.ராஜகுமாரியையும் ஒப்பந்தம் செய்யச் சொன்னாராம் அவர். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க டி.ஆர்.ராஜகுமாரி மறுத்துவிட்டார்.

பின்னர், பாடல் பதிவுக்குப் பிறகு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர் சிறைக்குச் சென்றுவிட, படம் நின்றுவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த தயாரிப்பாளர்கள், பிறகு தியாகராஜ பாகவதரைப் போல நன்றாகப் பாடவும்நடிக்கவும் தெரிந்த பெங்களூரைச் சேர்ந்த ஹொன்னப்ப பாகவதரைத் தேர்வு செய்தனர். அப்போது அவர், கிருஷ்ணகுமார், சதி சுகன்யா, பிரபாவதி, பர்மாராணி உட்பட சில படங்களில் நடித்திருந்தார்.

ஹொன்னப்ப பாகவதரை இயக்க விருப்பமில்லாத ராஜா சந்திரசேகர் படத்திலிருந்து விலகிவிட்டார். இதனால் தயாரிப்பாளர் ஜூபிடர் சோமுவும் எடிட்டரும் நடிகை பானுமதியின் சகோதரி கணவருமான வி.எஸ்.நாராயணனும் இணைந்து படத்தை இயக்கினர். நடிகராக அப்போது முத்திரைப் பதிக்காத எம்.ஜி.ஆருக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது. இதில் அவர் தெலுங்கு நடிகை மாலதியுடன் ஆடியசிவதாண்டவம் இந்தப் படத்தின் ஹைலைட்! ஆனந்த தாண்டவமும் உண்டு.

இந்த நடனங்களுக்காக மாதக்கணக்கில் ஒத்திகைப் பார்த்தார் எம்.ஜி.ஆர். கடுமையானப் பயிற்சிக்குப் பிறகு படப்பிடிப்பில் பங்கேற்று அசத்தினார்.

இந்த உழைப்பைக் கண்டுதான் இயக்குநராக, தான் அறிமுகமான ‘ராஜகுமாரி’ படத்துக்கு எம்.ஜி.ஆரை கதாநாயகனாக்க வேண்டும் என்று ஏ.எஸ்.ஏ.சாமி சொன்னபோது ஏற்றுக்கொண்டது ஜூபிடர் நிறுவனம்.

சூரபத்மனை முருகன் வென்ற புராணக் கதைதான் படம். இதில் முருகன் - வள்ளி கதையையும் சேர்த்திருந்தார்கள். பிரபல பாடகி ஜீவரத்தினம் நாரதராக ஆண் வேடத்தில் நடித்திருந்தார். அந்தகாலகட்டத்தில் திருச்சியில் பிரபல கண் மருத்துவராக இருந்த ஓ.ஆர்.பாலு, சூரபத்மனாக நடித்தார். மேலும் திருச்சூர் பிரேமாவதி, காளி. என்.ரத்தினம், மங்களம், டி.வி.குமுதினி, பேபி ஹரிணி என பலர் நடித்திருந்தனர்.

எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்தனர். பாபநாசம் சிவன் பாடல்கள் எழுதியிருந்தார். 1946-ம் ஆண்டு இதே தேதியில் வெளியாகி இருந்தது இந்தப் படம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்