சென்னை: ’லப்பர் பந்து’ திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் சிம்பு பாராட்டியுள்ளார். இது தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், சுவாசிகா, சஞ்சனா, ஹரிஷ் கல்யாண், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் கொண்டாடப்பட்டது. படம் வெளியாகி ஒரு மாதங்கள் கடந்த நிலையில், இப்போதும் இப்படத்துக்கு திரையரங்கில் கணிசமான கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளியை முன்னிட்டு வரும் 31-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்தப் படம் வெளியாகிறது. ‘லப்பர் பந்து’ படத்தை பார்த்துவிட்டு பல்வேறு திரையுலகினர் படக்குழுவினரைப் பாராட்டினார்கள். தற்போது ‘லப்பர் பந்து’ பார்த்துவிட்டு சிம்புவும் படக்குழுவினரை அழைத்து பாராட்டியிருக்கிறார். படத்தில் இடம்பெற்றிருந்த விஷயங்கள் குறித்து படக்குழுவினரிடம் கலந்துரையாடி இருக்கிறார். இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago