ஹைதராபாத்: தெலுங்கில் வெளியான ‘லவ் ரெட்டி’ திரைப்படத்தின் திரையிடலுக்குப் பின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் என்டி ராமசாமியை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமரன் ரெட்டி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான தெலுங்கு படம் ‘லவ் ரெட்டி’. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் இப்படத்தின் திரையிடலுக்குப் பின் படக்குழுவினர் அங்கு சென்று பார்வையாளர்களை சந்தித்தனர். அப்போது திடீரென திரையரங்கில் படம் பார்த்து முடித்து வந்த பெண், அங்கு நின்றிருந்த நடிகர் என்டி ராமசாமியை சரமாரியாக தாக்கினார். அவர் தாக்கும்போது, “காதல் ஜோடியை ஏன் பிரித்தாய்?” என திட்டினார். அருகிலிருந்த படக்குழுவினர் என்டி ராமசாமியை மீட்டனர்.
இருப்பினும் மீண்டும் அவரை அடிக்க அந்த பெண் பாய்ந்தார். இதற்கு காரணம் படத்தில் என்டி ராமசாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் படத்தில் காதலர்களை பிரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனால், படத்துடன் ஒன்றிபோன பெண் பார்வையாளர், நடிகரை தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர் இதனை புரமோஷன் யுக்தி என்றும் சாடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago