அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ டிச.5-ல் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு நாள் முன்னதாகவே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் 'புஷ்பா'. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக, இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்பு படத்தின் பணிகள் நிறைவடையாத காரணத்தால் டிசம்பர் 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது ஒருநாள் முன்பாக டிசம்பர் 5-ம் தேதி படம் வெளியாகிறது.

‘புஷ்பா 2’ படத்தின் உரிமைகள் விற்பனையை தொடங்கியுள்ளது படக்குழு. ஓடிடி, சாட்டிலைட், இசை உள்ளிட்ட உரிமைகள் முன்பாகவே விற்கப்பட்டுவிட்டன. தமிழக உரிமையைக் கைப்பற்ற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டன. ஆனால், தமிழில் இதன் வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் நிறுவனத்திடம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முன்பே கொடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்