கொச்சி: முன்னாள் மனைவியை துன்புறுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தது உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு நடுவே நடிகர் பாலா தனது உறவுக்கார பெண்ணான கோகிலாவை இன்று மணம் முடித்தார். இது அவரது 3-வது திருமணம் என கூறப்படுகிறது.
தமிழில் ‘அன்பு’, ‘காதல் கிசு கிசு’, ‘கலிங்கா’, அஜித்தின் ‘வீரம்’, ரஜினியின் ‘அண்ணாத்த’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் பாலா. இப்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவின் சகோதரர். இவர், பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் அவந்திகா என்ற மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக அம்ருதாவுடன் விவாகரத்து பெற்றார் பாலா. அதன் பின் கடந்த 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார் பாலா. இவர்கள் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
அம்ருதாவுடனான திருமணத்துக்கு முன்னதாக அவர் சந்தானா சதாசிவம் என்ற பெண்ணுடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அண்மையில் விவாகரத்து நடைமுறைகளை மீறி தன்னை துன்புறுத்துவதாக முன்னாள் மனைவி அம்ருதா அளித்த புகாரில் பாலா கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் தனது தாய் மாமன் மகளான கோகிலா என்பவரை நடிகர் பாலா இன்று திருமணம் செய்துகொண்டார். எர்ணாகுளத்தில் உள்ள பாவகுளம் கோயிலில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. ரூ.250 கோடி மதிப்புள்ள தனது சொத்துக்களை பாதுகாக்கவும், தன்னுடைய உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும் துணை தேவைப்படுவதால் இந்த திருமணம் செய்துகொள்வதாக பாலா தெரிவித்திருந்தார். மேலும் தனது திருமணம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் குறிப்பிடும்போது, “கோகிலா என்னுடைய உறவினர். 74 வயதான என்னடைய தாயார் திருமணத்தில் கலந்துகொண்டு எங்களை வாழ்த்த ஆசைப்பட்டார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. கோகிலாவுக்கு மலையாளம் தெரியாது. கடந்த காலங்களில் என் மீதும், என் உடல் நலன் மீதும் அக்கறை கொண்டு உறுதுணையாக இருந்தார். அவரால் தான் என்னுடைய உடல்நலன் மேம்பட்டது” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago