‘ரோலக்ஸ்’ படம் எப்போது நடக்கும் என்பதற்கு சூர்யா பதிலளித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’. இப்படம் பல்வேறு மொழிகளில் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக தற்போது மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் விளம்பரப்படுத்தி வருகிறார் சூர்யா.
மும்பையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரம் குறித்து, தனிபடமாக எப்போது என்று சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தில் அரை நாள் மட்டுமே நடித்தேன். அதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என நினைக்கவில்லை.
’விக்ரம்’ வெளியான பிறகு நானும், லோகேஷ் கனகராஜும் சந்தித்தோம். அப்போது ’ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தை ஏன் தனி படமாக பண்ணக் கூடாது எனக் கேட்டார். அதற்குப் பிறகு இரண்டு முறை சந்தித்துப் பேசினோம். அவரும் பிஸி, நானும் பிஸி. இருவரும் இணையும் போது ‘ரோலக்ஸ்’ அல்லது ‘இரும்புக்கை மாயாவி’ ஏதேனும் ஒன்று நடக்கும். அதற்கு காலம் தான் பதில் சொல்லும்” என்று பதிலளித்துள்ளார் சூர்யா.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் என்ற கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. அதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது நினைவுக் கூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago