சென்னை: “ஸ்டார் படத்தில் 20 நிமிட காட்சிகளை நீக்கச் சொன்னேன். ஆனால், படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருந்தனர். இறுதியில் நான் சொன்னது போலவே நடந்தது” என நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.
கவின் நடித்துள்ள ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் அக்.31-ல் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘ஸ்டார்’ படத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். அவர் கூறுகையில், “ஸ்டார் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தது. படத்தின் கதை கேட்கும்போது சரியாக இருந்தது. அந்த நம்பிக்கையில் தான் படம் பண்ணேன். இறுதியில் படத்தின் அவுட் பார்க்கும்போது படம் கொஞ்சம் நீண்டுகொண்டே செல்வதாக தோன்றியது. படம் பார்த்துவிட்டு, படம் நன்றாக உள்ளது. அதற்கான காட்சிகளும் நிறைய உள்ளது.
ஆனால், சில காட்சிகள் படத்திலிருந்து விலகி நிற்கின்றன. அது நன்றாக உள்ள காட்சிகளையும் சேர்த்து பாதிக்கிறது. எனவே 20 நிமிடம் கட் செய்யலாம் எனச் சொன்னேன். ஆனால், அதை மறுத்த படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருந்தனர். இறுதியில் நான் சொன்னது தான் நடந்தது என்பதால் இது எனக்கு முன்கூட்டியே தெரியும். ஆனால், கடைசியில் தயாரிப்பாளர் ஹாப்பி தான்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago