லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
ஹைதராபாத் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறார்கள். ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் கவுரவ கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அமீர்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முழுக்கதையினையும் கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் தருவதாகக் கூறியிருந்தார் அமீர்கான். இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் - அமீர்கான் சந்திப்பு கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ‘கூலி’யில் அமீர்கான் நடிப்பது உறுதியாகிவிட்டது.
அதற்குப் பிறகு அமீர்கானை இயக்குவதற்கும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதற்காக தன்னிடம் உள்ள கதைகளை கூறியிருக்கிறார். அதில் ஒரு கதை அமீர்கானுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் அந்தக் கதையினை திரைக்கதை வடிவமாக்கி வருவதாக லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.
‘கூலி’ முடித்துவிட்டு ‘கைதி 2’ இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதற்குப் பிறகு அமீர்கானை இயக்குவார் எனத் தெரிகிறது. இதன் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
50 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago