“தவறு செய்துவிட்டேன்” - சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்த நபர் வருத்தம்!

By செய்திப்பிரிவு

மும்பை: பாபா சித்திக்கை விட மிகவும் மோசமான நிலைமை சல்மான் கானுக்கு ஏற்படும் என்று மிரட்டல் விடுத்த நபர் தற்போது தான் தவறு செய்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனான நீண்ட கால பகையை முடிக்க சல்மான் கான் ரூ.5 கோடி வழங்க வேண்டும் என்று ஒரு சமீபத்தில் மிரட்டல் செய்தியை மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அனுப்பியிருந்தார். பணத்தை சல்மான் கான் கொடுக்கத் தவறினால், அவரது நிலைமை சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அந்த மிரட்டல் செய்தியில், “சல்மான் கான் நீண்ட நாட்கள் வாழ விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனான பகையை முடித்துக்கொள்ள விரும்பினால் அவர் 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும். இதை அலட்சியம் செய்யவேண்டாம். அப்படிச் செய்தால், அவரின் நிலைமை பாபா சித்திக்கை விட மிகவும் மோசமாக இருக்கும்.” என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மிரட்டலை விடுத்த அந்த நபர் தற்போது அனுப்பியுள்ள புதிய வாட்ஸ் அப் செய்தியில் தான் தவறு செய்துவிட்டதாக கூறி வருத்தம் தெரிவித்துள்ளார். எனினும் அந்த செய்தி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்துள்ளதை கண்டுபிடித்துள்ள மும்பை போலீஸார் அந்த நபரை பிடிப்பதற்காக அங்கு விரைந்துள்ளனர்.

முன்னதாக, சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் (அஜித் பவார் அணி) சேர்ந்தவருமான பாபா சித்திக் கடந்த அக்.12ம் தேதி பாந்திராவில் தனது மகன் ஷீசான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சதியில் முக்கியமானவராக கருதப்படும் சுபம் லோங்கர், பாபா சித்திக்கின் கொலைக்கு பின்னால் லாரன்ஸ் பிஷ்னோய் இருப்பதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். இதனிடையே, சல்மான் கானை கொலை செய்ய சர்வதேச கிரிமினலான லாரன்ஸ் பிஷ்னோய் குறிவைத்துள்ளார். இவரது கும்பலைச் சேர்ந்த சுமார் 70 பேர் சல்மான் கானை, 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக மும்பை காவல்துறை கருதுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்