கவின் நடித்துள்ள ‘ப்ளடி பெக்கர்’ படத்தின் கதைக்களம் என்னவென்று தெரியவந்துள்ளது.
சிவபாலன் இயக்கத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் நெல்சன் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் டிக்கெட் புக்கிங் பணிகள் வெளிநாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் இணையத்தின் மூலமாக படத்தின் கதைக்களம் என்னவென்று தெரியவந்துள்ளது. ‘ப்ளடி பெக்கர்’ படத்தின் கதைக்களம் குறித்து படக்குழு, “ஒரு சோம்பேறி பிச்சைக்காரனின் கதை. தன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு திருப்பமான சூழ்நிலையில் பிச்சைக்காரன் ஒருவன் சிக்கிக் கொள்கிறான். அந்தச் சூழ்நிலையிலிருந்து அவன் எப்படித் தப்பிக்கிறான், அந்தச் சூழ்நிலையிலிருந்து அவன் என்ன கற்றுக்கொள்கிறான் என்பதுதான் கதையின் மையக்கரு” என்று தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago