சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
இரண்டாவது சிங்கிள் எப்படி? - ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை கபில் கபிலன், ரக்ஷிதா சுரேஷ் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். ‘வெண்ணிலவு சாரல் நீ… வீசும் குளிர் காதல் நீ’ என தொடங்கும் பாடல் மெலோடி பாடல் மனதை கரைய வைக்கிறது. காதலை பரிமாறிக்கொள்ளும் வரிகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, “எங்கே இருள் என்றாலும், அங்கே ஒளி நீதானே”, “நீண்ட தூரம் போனபோதும் நீங்குமா காதலே” போன்ற வரிகள் கவனம் பெறுகின்றன. எல்லாவற்றையும் தாண்டி பாடகர்கள் இருவரின் மெல்லிய குரல்கள் வரிகளை வருடிக் கொடுக்கின்றன. மெலொடிக்கு பெயர் போன வித்யாசாகருக்கு பிறகு அந்த இடத்தை ஜி.வி.பிரகாஷ் நிரப்பி வருகிறார்.
அமரன்: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘அமரன்’. சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி இப்படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது சிங்கிள் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago