விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ககன மார்கன்’ படத்தின் முதல் தோற்றம் எப்படி? 

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள ‘ககன மார்கன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’ ‘தெகிடி’ உள்ளிட்ட படங்களின் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால். இவர் ‘ககன மார்கன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.

அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரகிடா, வினோத் சாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு விஜய் ஆண்டனியே இசையமைக்கிறார். ‘ககன மார்கன்’ என்றால், ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

முதல் தோற்றம் எப்படி?: வண்ணங்களால் நிரம்பியிருக்கிறது விஜய் ஆண்டனியின் முகம். அதற்குள் உள்ள இடைவெளியில் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் அவருடைய மற்றொரு புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. வித்தியாசமாகவும், அதேவேளையில் பார்த்ததும் கவனம் பெறும் வகையிலும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் விஎஃப்எக்ஸ் காட்சிகள் இருக்கும் என்பதை படக்குழு தெரிவித்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் போஸ்டர் அமைந்துள்ளது. விஜய் ஆண்டனி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படம் தமிழ் பாரம்பரிய மரபு சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய புலனாய்வு திரைக்கதையாக உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

48 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்