திருவனந்தபுரம்: தன் மீது பொய்யான வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும், தான் ஒரு வாழும் தியாகி என்றும் மலையாள நடிகர் ஜெயசூர்யா பாலியல் புகார் தொடர்பான விசாரணையின்போது காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் ஆலுவாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நடிகர் ஜெயசூர்யாவுக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.
இந்த விசாரணையில் நடிகர் ஜெயசூர்யா காவல் துறையினரிடம் அளித்த விளக்கம்: “என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் மறுக்கிறேன். என் மீதான பாலியல் புகார் முற்றிலும் புனையப்பட்டது. எனக்கு முன்ஜாமீன் கூட தேவையில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிக்கும் வரை நான் தொடர்ந்து சட்ட ரீதியாக போராடுவேன். நான் வாழும் தியாகி என்பதை நம்புகிறேன். யார் மீது வேண்டுமானாலும் பொய் வழக்கு போடலாம் என்பது ஆபத்தானது. குறைந்தபட்சம் என் வழக்கை எதிர்கொள்ள எனக்கு ஒரு தளம் உள்ளது. பலருக்கு அப்படி எதுவும் இல்லை. இப்படியான பொய் வழக்குகள் பலரது குடும்பத்தையும் சீர்குலைத்து விடுகிறது” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago