திருவனந்தபுரம்: “எனக்கு சிறிய இடைவெளி தேவைப்படுகிறது. நான் என்னுடைய உடல் நலனில் போதிய கவனம் செலுத்தவில்லை. இதற்கு நான் மட்டுமே காரணம்” என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரொமோஷனில் ஈடுப்பட்டுள்ள நடிகர் துல்கர் சல்மான் குறைவான படங்களில் நடிப்பது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “எனக்கு சிறிய இடைவெளி தேவைப்படுகிறது. இதற்கு யாரும் காரணமல்ல. அண்மையில் வெளியான என்னுடைய சில படங்கள் தோல்வியடைந்தன. அதுமட்டுமல்லாமல் எனக்கு உடல் நல பிரச்சினைகளும் உண்டு. கடந்த ஆண்டு என்னால் ஒரே ஒரு படம் மட்டும் தான் நடிக்க முடிந்தது. ஒரு வகையில் அது என்னுடைய தவறு தான். நான் என்னுடைய உடல் நலனில் போதிய கவனம் செலுத்தவில்லை” என்றார்.
துல்கர் சல்மானை பொறுத்தவரை அவர் 13 ஆண்டுகளாக திரையுலகில் நடிகராக வலம் வருகிறார். இதுவரை அவர் 43 படங்களில் நடித்துள்ளார். இதனை அவரே அந்த பேட்டியில் குறிப்பிட்டார்.
2022-ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ ஹிட்டடித்தது. அதன்பிறகு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவரது ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் தோல்வியை தழுவியது. தற்போது அவரது நடிப்பில் ‘லக்கி பாஸ்கர்’ வெளியாக உள்ளது. துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு திரைப்படம் வெளியானது. இந்த ஆண்டு ஒரே திரைப்படம் மட்டுமே வெளியாக உள்ளது. முன்னதாக மணிரத்னம் - கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க இருந்து துல்கர் விலகியதும் இங்கே கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
38 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago