ரூ.200 கோடி வசூலை நெருங்கும் ரஜினியின் ‘வேட்டையன்’ 

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 4 நாட்களில் ரூ.187 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படம் ரூ.200 கோடியை நெருங்கும் என கூறப்படுகிறது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு கடந்த அக்டோபர் 10-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. என்கவுன்டர், நீட் தேர்வு, கோச்சிங் சென்டர்களின் அராஜகம் குறித்து பேசியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.65 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. 2வது நாளையும் சேர்த்து ரூ.100 கோடி வசூலை எட்டியது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.187 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படம் ரூ.200 கோடியை நெருங்கும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்